பிரமாண்ட பொருட் செலவில் வரும் 14ஆம் திகதி வெளிவரவிருக்கும் கங்குவா திரைப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படக்குழுவை மனதார பாராட்டியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் இப்படம் அமைந்துள்ளது.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கே.ஈ. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் கங்குவா படம் சென்சார் செய்யப்பட்டது.
இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் கங்குவா படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்படம் அமையும் என்றும் கூறியுள்ளனர். மேலும் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றி படமாக கங்குவா அமையும் என்றும் சென்சார் குழு புகழ்ந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
0 Comments