loader
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 9 பேர் பலி!  4 பகுதிகள் பாதிப்பு!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 9 பேர் பலி! 4 பகுதிகள் பாதிப்பு!

ஜகார்த்தா, நவ4-
இந்தோனேசியாவில் நுசா டெங்கரா பிளோர்ஸ் தீவில் உள்ள 
எரிமலை வெடித்ததில்  9 பேர் உயிரிழந்தனர்.

 இதனால் இலே புரா மாவட்டத்தில் துலிபாலி கிராமம், நோபோ, நுரபெலன் மற்றும் ரியாங் ரீட்டா ஆகிய 4 கிராமங்களில்  எரிமலையின் சீற்றங்கள் பரவி அப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததில் பலர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரண்டாவது எரிமலை வெடிப்பு இதுவாகும். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் மவுண்ட் மராபி பகுதியில், கடந்த அக் 27 ஆம் தேதி எரிமலை வெடித்தது. இதனால், அருகிலுள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் எந்த உயிரிழப்பும் அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 Comments

leave a reply

Recent News