சென்னை, அக் 4-
தமிழ் நாட்டிற்கு சிறப்பு வருகை புரிந்திருக்கும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கெஅடிலான் கட்சியின் துணை செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நேற்று மரியாதை நிமித்தமாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் எழிழனுடன் சந்திப்பு நடத்தினார்.
மலேசிய - இந்திய இடையே தொப்புள் கொடி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருவரும் கலந்துரையாடினர்.கலை கலாச்சாரத்தை தொடர்ந்து மேம்படுத்துவது தொடர்பிலும் பேசப்பட்டது.
மருத்துவ துறையில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகள் இடையே வர்த்தகத்தை விரிவுபடுத்தி தொழில் வாய்ப்புகளை தொடர்பிலும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக டாக்டர் சத்யா பிரகாஷ் தெரிவித்தார்.
0 Comments