பெஸ்டாரி ஜெயா, செப். 29-
மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு நாம் தொடர்ந்து அவர்களுக்கு கூடுதல் பயிற்ச்சிகளை வழங்க வேண்டும் என (TADIKA GENIUS BERSINAR) ஜீனியஸ் பாலர்ப்பள்ளியின் தோற்றுனர் ஹேமநாதன் தெரிவித்தார்.
அந்த வகையில் ஜீனியஸ் பாலர்ப்பள்ளி மாணவர்களின் திறனை வழர்ப்பதற்கு இன்று காலை பெஸ்டாரி ஜெயாவில் உள்ள ராஜ மூடா மூசா இடைநிலைப் பள்ளியின் மண்டபத்தில் போட்டி விளையாட்டுகள் நடத்தப்பட்டது.
ஆண்டு தோறும் நடைப்பெறும் இந்த போட்டி விளையாட்டுகள் இவ்வாண்டும் புதிய முயற்ச்சியில் சற்று வேறுபட்ட வகையில் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு ஜீனியஸ் பாலர்ப்பள்ளியின் ஆசிரியர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் பெற்றோர்களின் முழு ஆதரவுகள் தான் முழு காரணம்.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமையும் இது போன்ற போட்டி விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற ஜீனியஸ் பாலர்ப்பள்ளின் போட்டி விளையாட்டில் 4,5 மற்றும் 6 வயதுடைய பாலர்ப்பள்ளி மாணவர்களுடன் 100 க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். இந்த போட்டி விளையாட்டில் கலந்துக்கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஹேமநாதன் தெரிவித்தார்.
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments