loader
இந்திய சிறுதொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காக I-BAP திட்டத்தின் கீழ் 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

இந்திய சிறுதொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காக I-BAP திட்டத்தின் கீழ் 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

கிள்ளான், செப் 28-
நாட்டில் உள்ள இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு உதவும் வகையில் I-BAP எனும் புதிய திட்டத்தின் வாயிலாக 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பதாக
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ  இரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அமைச்சின் கீழ் இயங்கும் SME கோர்ப் வாயிலாக கிட்டத்தட்ட 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 1 லட்சம் வெள்ளி வரை வர்த்தக  உதவித் தொகை வழங்கப்படும்.இந்த நிதியை கொண்டு தங்களின் வர்த்தகத்தை வணிகர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

தங்கள் சிறு தொழிலுக்கு  தேவைப்படும் இயந்திரங்கள் உட்பட பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதியை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பம் செய்யும் இந்திய நிறுவனங்கள் 60 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்க வேண்டும். 
ஆண்டுக்கு 3 லட்சம் வெள்ளி வரை வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் குறைந்தது 12 மாதங்களுக்கு செயல்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

வணிக பதிவு சான்றிதழ், வர்த்தக இடங்களுக்கான பதிவு, நிறுவன கணக்கறிக்கை, வங்கி கணக்கறிக்கை உட்பட 5 ஆவணங்களை மட்டும் கொண்டு இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்த அடுத்த 14 நாட்களில் அதற்கான முடிவு தெரிந்து விடும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே 
தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 3 கோடி வெள்ளி மற்றும் அமானா இக்தியார் பெண் திட்டத்தின் வாயிலாக 5 கோடி மில்லியன், பேங்க் ரக்யாத் பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 5 கோடி வெள்ளி இதற்கு முன்னர்  ஒதுக்கப்பட்டது.

இம் மூன்று திட்டங்களும் இந்திய வணிகர்களுக்கு பெரும் பயனாக அமைந்த வேளையில் இப்போது ஐ - பேப் திட்டமும் பெரும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News