loader
பரதன் கிண்ண விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு விருந்து!

பரதன் கிண்ண விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு விருந்து!

கோலாலம்பூர், செப்.17-
முன்னாள் சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவை பரதன் கிண்ண விளையாட்டு வீரர்களுக்கு  நன்றி கூறும் வகையில் ஒன்றுகூடல் விருந்து நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி அன்று இரவு 7.30 மணி அளவில் கோலாலம்பூர் புக்கிட் கியாரா ராயல் சிலாங்கூர் கிலர்ப்பில் இந்த ஒன்றுகூடல் விருந்து நிகழ்வு நடைபெறும் என 
சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவையின் தலைவர் மூ.சு.மணியம் தெரிவித்தார்.

மேலும் இந்த விருந்து நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவோர்கள் முடிந்தவரையில் சிலாங்கூர் மாநில  நிறத்தில் காலர் வைத்த சட்டையை அணிந்து வந்தால் சிறப்பு என ஏற்பாட்டுக் குழுவினரின் சார்பில் தலைவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் புகழ்பெற்ற பரதன் கிண்ண காற்பந்து போட்டியில் நம் இந்திய விளையாட்டாளர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
அவ்வகையில் பரதன் கிண்ண விளையாட்டு வீரர்கள் 19 தடவை சாம்பியனாக வெற்றி வாகை சூடி நம்  சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

 இவ்வேளையில் அவர்களுக்கு  அங்கீகாரம் வழங்கும் வகையிலும் அவர்களின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் முன்னாள் சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவை இந்த விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விருந்து நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொள்வார்கள் என நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News