loader
THE FORGE MALAYSIA எனும் திரைப்பட தயாரிப்பு பயிற்சி முகாம்!

THE FORGE MALAYSIA எனும் திரைப்பட தயாரிப்பு பயிற்சி முகாம்!

கோலாலம்பூர், செப்.17-
திரைப்படத் துறையில் நிபுணத்துவம் பெறும் வாய்ப்பினை  மலேசியர்களுக்கு வழங்கும்  வகையில் THE FORGE MALAYSIA எனும்  சிறப்பு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்யவுள்ளது.

இந்த பயிற்சி முகாம் தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்புக்கூட்டம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி தலைநகர் GSC LALA PORT என்ற இடத்தில் மதியம் 6 மணி முதல் 8 மணி வரையில் நடைபெற்றது.

அன்மையில் வெளியாகிய விஜய் நடித்த கோட் திரைப்படத்தை இயக்கிய பிரபல  திறைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு THE FORGE MALAYSIA வை அறிமுகம் செய்தார்.

மேலும் இந்த சந்திப்புக்கூட்டத்தை THE FORGE MALAYSIA வோடு இணைந்து செயல்படும் கிக் ஆப் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பிரேம் ஆனந்த் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து பேசினார். நாட்டில் திரைப்பட தயாரிப்பு துறையை நிபுணத்துவம் வாய்ந்த துறையாக மாற்றியமைக்கும் நோக்கத்திலும், இத்துறையில் உள்ள புதிய நவீன முறையை கற்றுக்கொள்ளவும் இந்த முகாமை நடத்த முன் வந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த முகாமின் வழி பபயிற்சி பெறுவோர்கள் மலேசிய திரைப்பட துறையில் அனைத்துலக ரீதியிலான அங்கீகாரத்தை பெறலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். திரைப்பட துறையானது வெறும் திரைப்படம் தயாரிப்பது மட்டும் அல்ல அது அதில் புதிய உறுவாக்கம் இருக்க வேண்டும்.
ஆகவே அத்துறையில் முழுமையான அனுபவம் பெற்றால் மட்டுமே அதனை முறையாக செயல்படுத்த முடியும் என இயக்குனர் வெங்கட் பிரபு ஊடகவியலாளர் சந்திப்பு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
 
அதனால் தான் இந்த முகாமில் திரைப்படத் துறையை சார்ந்த அனைத்து பயிற்டிகளும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை மலேசியர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரேம் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News