புதுடில்லி, ஆக.21-
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அட்டூழியங்களைக் கையாள்வதில் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்காதது குறித்து தனது விமர்சனத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் அன்வார் இப்ராஹிம், இனப்படுகொலை நடைபெறுகிறது, அதற்கு முடிவுகட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது, ஆனால் அதைத் தடுக்க சர்வதேச அளவில் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றார்.
உக்ரைனில் நடந்த இனப்படுகொலை குறித்து பலர் தங்கள் கருத்துக்களைக் கூறியதை அவர் ஒப்புக்கொண்டார்,
ஆனால் பாலஸ்தீனத்தில் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டபோது, அவர்கள் அதை போரின் விளைவாகக் கருதி அதை சாதாரணமாக கருதுவது ஏற்புடையதல்ல. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென இங்கு நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது பிரதமர் தெரிவித்தார்.
கடந்த திங்கள் முதல் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியாவிற்கு 3 நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
0 Comments