சுங்கை பூலோ, ஜூலை.13-
மெட்ரிக்குலேஷன் வாய்ப்பை பெறுவதற்கு 10A பெற்ற மாணவர்கள் முன்வந்து அதற்கான விண்ணப்பத்தை செய்ய வேண்டும் என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையமைச்சரும் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணம் வலியுறுத்தினார்.
எஸ்.பி.எம் தேர்வில் 10A பெறும் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு கிடைக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். நிச்சயம் பிரதமர் சொன்னதை செய்வார் என தெரிவித்த ரமணன் ஆனால் அதற்கான முறையான விண்ணப்பத்தை செய்வதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.
ஆகவே மெட்ரிக்குலேஷன் வாய்ப்பை பெற விரும்பும் மாணவர்கள் உடனடியாக அதற்கான விண்ணப்பத்தை செய்து கொள்ள வேண்டும். மெட்ரிக்குலேஷன் குறித்த எதிர்மறை சிந்தனைகளை மாணவர்கள் களைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அவ்வகையில் அப்படி முறையாக விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்னை சந்தியுங்கள் நிச்சயம் நான் அதற்கு சிறந்த தீர்வு காண வழி வகுப்பேன் என டத்தோ ரமணன் உறுதியளித்தார்.
இன்று சுங்கைபூலோவில் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 159 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
சுங்கைபூலோ தொகுதியில் உள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சு, பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் ஒத்துழைப்புடன் எஸ்பிஎம் தேர்வில் 7ஏக்குப் மேல் எடுத்த 159 மாணவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட ரி.ம 72,350 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
வழங்கப்பட்ட தொகை நிச்சயம் அம்மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேங்க் ரக்யாட் செய்த இந்த உதவியைப்போன்று மற்ற ஏஜென்சிகளும் மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் வாரியக் குழு உறுப்பினர் டத்தோ ஹாஜி ஷம்ரி சாலே, தலைமை நிர்வாகி சைபுல் ரிஷால், துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments