கோலாலம்பூர், ஜூன் 5-
மலேசிய மடாணி கொள்கையின் கீழ் மனித உரிமை முக்கியதுவம் அடங்குகிறது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் உடன் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தை அவர் முன்வைத்தார்.
நாட்டின் வளம், மக்களின் அமைதி என்ற குறிக்கோளுடன் செயல்படும் நாடு கண்டிப்பாக மனித உரிமை என்பதை மறந்துவிடக்கூடாது. ஜக்கிய நாடுகளின் மனித உரிமை குழுவுடன் தொடர்பை வளர்த்து கொள்ளவும் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் மனித உரிமை விழிப்புணர்பை ஏற்படுத்தவும் அரசாங்கம் வோகர் மற்றும் அவரின் பேராளர்களை நாட்டிற்கு அழைத்ததாக பிரதமர் தெரிவித்தார்.
செய்தி: காளிதாசன் தியாகராஜன்
0 Comments