loader
விளையாட்டு போட்டிகள் வாயிலாக பல்லின மக்களிடையிலான ஒற்றுமையை வளர்க்க முடியும்  - டத்தோ ஸ்ரீ சரவணன்.

விளையாட்டு போட்டிகள் வாயிலாக பல்லின மக்களிடையிலான ஒற்றுமையை வளர்க்க முடியும் - டத்தோ ஸ்ரீ சரவணன்.

தாப்பா ஜூன் -2

பல்லின மக்களிடையிலான ஒற்றுமையை விளையாட்டுப் போட்டிகள் வாயிலாக வலுப்படுத்த முடியும்  என  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

தமிழன் கால்பந்து கிளப்பின் ஏற்பாட்டில் ,  தாப்பா மினி அரங்கில் கால்பந்துப் போட்டி நடைபெற்றது.

சுமார்  24 குழுக்கள் இக்கால்பந்துப் போட்டியில் கலந்துக் கொண்டன.இப்போட்டியில்  சிறப்பு விருந்தினாராக டத்தோஸ்ரீ  எம். சரவணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கால்பந்துப் போட்டியில் பல்லினங்களைச் சேர்ந்த குழுக்கள் கலந்துகொண்டுள்ளன. இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.குறிப்பாக இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் மக்கள் இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்.

ஆகையால் இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என டத்தோஸ்ரீ சரவணன்  தெரிவித்தார்.

-வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News