loader
எங்களின் வாக்குகள் வேண்டும் என்றால் உத்தரவாத உடன்படிக்கையில் கையெழுத்திடுங்கள்!  கேகேபியிலுள்ள 5 தோட்ட மக்கள் போர்க்கொடி!

எங்களின் வாக்குகள் வேண்டும் என்றால் உத்தரவாத உடன்படிக்கையில் கையெழுத்திடுங்கள்! கேகேபியிலுள்ள 5 தோட்ட மக்கள் போர்க்கொடி!

கோலாலம்பூர், ஏப்.26-

எங்களின் தேவைகளை தீர்த்து வைப்பதை உறுதி செய்யும் வகையில் உத்தரவாத உடன்படிக்கையில் கையெழுத்திட்டால் மட்டுமே எங்களின் வாக்குகள் உங்களுக்கு கிடைக்கும் என கோல குபு பாருவிலுள்ள 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் கூறியுள்ளனர்.

இதுவரை அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு ஏமாந்தது போதும். இனியும் ஏமாற நாங்கள் தயாராக இல்லை. ஆகையால் கோல குபு பாரு இடைத்தேர்தலில் எங்களின் பலத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது என குடியிருப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி வாசுதேவன் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

ஆகையால் இம்முறை இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளருக்கு எங்களின் வாக்குகள் வேண்டுமென்றால் அவர் எங்களுடனான உத்தரவாத உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும். சுமார் 500க்கும் மேற்பட்ட வாக்குகளை நாங்கள் கொண்டுள்ளோம் என அவர் சொன்னார்.

சுற்றுவட்டாரத்திலுள்ள நிகழ் கார்டன் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், மிஞ்ஞா தோட்டம், மேரி தோட்டம், சுங்கை திங்கி தோட்ட மக்கள் அனைவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்த உத்தரவாத உடன்படிக்கையில் உள்ள தேவைகள் மக்களால் தயாரிக்கப்பட்டது அல்ல. மாறாக இதற்கு முன்னர் இங்கு போட்டியிட்ட அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் ஆகும். ஆகையால் அந்த வாக்குறுதிகள் அனைத்தும் இம்முறை செயல்படுத்தப்பட வேண்டும். 

இந்த தோட்டங்களிலுள்ள 245 தோட்டத் தொழிலாளிகளுக்கு 20 ஏக்கர் நிலத்தில் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும். அதற்கான நிலத்தை கடந்த 2019ஆம் ஆண்டு பெர்ஜாயா கோப் நிறுவனம் வழங்கிவிட்டது. இந்த வீடுகள் கட்டித்தரப்படும் வரையில் தற்போதைய வீட்டை காலி செய்ய வேண்டுமென எந்த ஒரு வர்புறுத்தலையும் தோட்ட மக்களுக்கு கொடுக்க கூடாது என இன்னும் சில விஷயங்கள் அந்த உத்தரவாத உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

leave a reply

Recent News