loader
சுங்கை பூலோ மடானி சந்தையில் 50% கழிவில் பொருட்கள் விற்பனை ! -டத்தோ ரமணன்

சுங்கை பூலோ மடானி சந்தையில் 50% கழிவில் பொருட்கள் விற்பனை ! -டத்தோ ரமணன்

சுங்கை பூலோ, மார்ச்.30-

சுங்கை பூலோ பாயா ஜெராஸில் நடந்த மடானி விற்பனை சந்தையில் அனைத்து பொருட்களும் முதல் முறையாக 50 விழுக்காடு கழிவில் விற்கப்பட்டது என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

அரசாங்கத்தின் மடானி விற்பனை சந்தை நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று  இந்த விற்பனை சந்தை  இங்கு நடைபெற்றது என்றார்.

வழக்கமாக இந்த விற்பனை சந்தையில் விற்கப்படும் பொருட்கள் 20 விழுக்காடு கழிவுடன் விற்கப்படும்.மலேசிய கூட்டுறவு ஆணையம் 20% கழிவுக்கான செலவை ஏற்றுக் கொண்ட நிலையில் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சு 10 சதவீத கழிவை வழங்கியது.

மலேசியாவில் முதல் முறையாக சுங்கை பூலோவில்  நாடாளுமன்றத்தில் தான்  50% கழிவுடன் இந்த மடானி விற்பனை சந்தை நடைபெறுகிறது என்று கூறுவதில் நான் பெருமை அடைகிறேன்.

நோன்பு பெருநாள் காலங்களில் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் தான் இந்த கழிவு வழங்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த விற்பனை சந்தையில் பொதுமக்கள் திரளாக  வந்து குறைந்த விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்றனர் என  சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன்  தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News