loader
சரஸ்வதி கந்தசாமிக்கு குறை மட்டும் தான் சொல்ல தெரியும் ! செயலாக்கம் இல்லை ! -டத்தோ ரமணன் !  சரஸ்வதிக்கு எதிராக திரும்பியது  பக்காத்தான் இந்திய தலைவர்களின் அம்பு!

சரஸ்வதி கந்தசாமிக்கு குறை மட்டும் தான் சொல்ல தெரியும் ! செயலாக்கம் இல்லை ! -டத்தோ ரமணன் ! சரஸ்வதிக்கு எதிராக திரும்பியது பக்காத்தான் இந்திய தலைவர்களின் அம்பு!

கோலாலம்பூர், மார்ச் 27-


ம.இ.காவையும் , அந்த கட்சியை சார்ந்த தலைவர்களை குறைச் சொல்லியே அரசியல் நடத்திய  ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இப்போது  தனது சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை குறை சொல்ல தொடங்கிவிட்டார். 

அதன் விளைவு இப்போது ஒட்டுமொத்த இந்திய  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  செனட்டர்களின் அம்பு அவர் மீது பாய்ந்துள்ளது.

அண்மையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் அனைவரும் ஒற்றுமை துறை அமைச்சர் அரோன் அகோ மற்றும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியுடன் ஒரு  சந்திப்பை நடத்தினர்.

இந்த சந்திப்பில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்  பி.பிரபாகரனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு மித்ராவை அவர் கவனிக்க  வாய்ப்பு கொடுங்கள்.. அதன் கீழ் ஆலோசனை குழு அமைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வையுங்கள் என கேட்டதற்கு , ஒற்றுமை துறை அமைச்சர் அப்படி எல்லாம் செய்ய முடியாது. அது என் பொறுப்பில் தான் இருக்கும் , உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பிரதமரை சென்று சந்தியுங்கள் என வெளிநடப்பு செய்தார்.

அதன் பின் நம்ம துணை அமைச்சர்  கடந்த காலத்தில்...... என வரலாறு வகுப்பு எடுக்க தொடங்கி  பிரதமர் துறையில்  ரமணன்  தலைமையில்  மித்ரா சரியாக செய்யவில்லை என சொல்ல கலந்துரையாடல் வாய் வாக்குவாதமானது.

பக்காத்தான் தலைவர்கள் வெளிநடப்பு செய்து. இப்போது பிரதமரை சந்திக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலை ஒரே கட்சியில் இருக்கும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி  மற்றும் துணை அமைச்சர் டத்தோ  ரமணனுக்கு இடையில் இப்போது கருத்து மோதல் தொடங்கி விட்டது.

ரமணன் வெளிப்படையாக சரஸ்வதி கந்தசாமிக்கு குறை மட்டும் தான் சொல்ல தெரியும், அவரிடம் செயலாக்கம் இல்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மித்ரா இவர்களின் பிடிவாதத்தால்  ஒரு செயல்பாடும் இல்லாமல் கிடப்பில் கிடக்கிறது. அனைவரும் எனக்கு அழைத்து விசாரிக்கிறார்கள். இதில் பாலர் பள்ளி ஆசிரியர்களும் அடங்குவர் என டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே  ஒட்டு மொத்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து யாரிடமும் ஒத்து போகாத சரஸ்வதி கந்தசாமி பதவி விலகும் படி கூறவுள்ளதாகவும் அதோடு மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் சென்று ஆலோசனை குழு உருவாக்கபட வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது.

இதன் வாயிலாக பாக்காத்தான் இந்திய தலைவர்களின் அம்பு சரஸ்வதி கந்தசாமி மீது பாய்ந்துள்ளது.

செய்தி : வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News