loader
காலுறை விவகாரத்தில் பிரதமர் வாயை திறக்க வேண்டும்! -கைரி

காலுறை விவகாரத்தில் பிரதமர் வாயை திறக்க வேண்டும்! -கைரி

கோலாலம்பூர்,மார்ச் 27-

காலுறை விவகாரம் தொடர்புடைய கேகே மார்ட் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏன் அமைதியாக இருக்கிறார் என முன்னாள் அமைச்சரான கைரி ஜமாலுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பிரிவினைவாத சர்ச்சைக்கு மத்தியில் மலேசியர்களை ஒன்றிணைக்கும் பொருப்பை அவர் முறையாக செய்ய வேண்டும்.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் பிரிவினை சர்ச்சைகள் எழுந்தால் அதனை முறையாக கையாழ தெரிந்த தலைவராக இருப்பது அவசியம். இதனை கையாழ்வது கடினம் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் சரியான முடிவை எடுக்கும் தருணத்தில் பிரதமர் உள்ளார். அதனை அவர் செய்வார் என்று நம்புகிறேன்.

இதுவரை கேகே மார்ட் விவகாரத்தில் பிரதமர் இருமுறை மட்டும்தான் வாயை திறந்துள்ளார். கடந்த 20ஆம் தேதி பேசிய அவர், விசாரணை தொடர வேண்டும் என்றும் தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் நேற்று முன்தினம் மதம்  சார்ந்த விவகாரத்தில் அதிலும் இஸ்லாத்தை இழிப்படுத்தினால் விட்டு கொடுக்கும் போக்கு இருக்காது என பிரதமர் கூறியிருந்தார்.

கேகே மார்ட் விவகாரத்தில் நாம் குரல் எழுப்பிவிட்டோம். விசாரணைக்கு பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இனியும் இந்த விவகாரத்தை பெரிது படுத்தி தேவையற்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்த வேண்டாம் என கைரி தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News