loader
90s  ராஜ்ஜியம் ஆரம்பம் ! ரஜினி தீ-யால் பற்றி எரியும் தமிழ் சினிமா!

90s ராஜ்ஜியம் ஆரம்பம் ! ரஜினி தீ-யால் பற்றி எரியும் தமிழ் சினிமா!

கோலாலம்பூர் ஜூலை-  20

4 தலைமுறையாக தமிழ் சினிமாவில் சிம்மாசனம் போட்டு சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் வலம்வரும் நடிகர் ரஜினிகாந்துடைய
நடிப்பு சாம்ராஜ்ஜியம் சரிந்துவிட்டது என ஈராண்டுகளாக பல விதமான விமர்சனங்கள் வந்த வேளையில்,
பல நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை தமிழ் சினிமா புகுத்த பார்த்த நேரத்தில்,
ஒரே பாடலில் 90ஆம் ஆண்டு காலத்தில் ரஜினி தக்க வைத்த ராஜ்ஜியத்தை தமிழ் சினிமாவிற்கு  
நிரூபித்து உள்ளார் சூப்பர் ஸ்டார்.

73 வயது ஆகியும் அதே மாஸ் அதே style-லுடன் ஜெயிலர் திரைப்படத்தில் மாஸ் காட்டியுள்ளார் 
சூப்பர் ஸ்டார். இந்த திரைப்படம் Pan India திரைப்படமாக வசூல் சாதனை செய்யபோகிறது என்பதையும் 
ரஜினி அதில் தீவிரம் காட்டியுள்ளதையும்   ஒரே பாடலில் மிரட்டலாக சூப்பர் ஸடார்
திரைப்பட தாயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு ஒரு மெசேஜ் கொடுத்துள்ளார்.

TIGER KAA HUKUM : அந்த ஒற்றை பாடல்   ரஜினியின் 90s  தீயை ஏற்படுத்தியதால்  
தமிழ் சினிமா இப்பொழுது பற்றி எரிகிறது. பல நடிகர்களை வரிகளால் பீதி அடைய வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

வரிகள் ஒவ்வொன்றும் மிரட்டல், எனக்கு வயதாகி விட்டது என்று தப்பு கணக்கு போடவேண்டாம் என்று
தமிழ் சினிமாவிற்கு நேரடி மெசேஜ் கொடுத்துள்ளார். புதிய trend-டை நானே உருவாக்குவேன் என 
பாடலில் மிரட்டியுள்ளார்.  சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு  பலர் துடிக்கிறார்கள்; குட்டி சுவரை எட்டி பார்த்தால்
உயிரை கொடுக்க கோடி பேரு... என தன் ரசிகர் ராஜ்ஜியத்தை நிரூபிக்க கிளம்பிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
இந்த படத்தின் வழி இயக்குனர் நெல்சனை இறக்கி பேசிய அனைவரது வாயையும் 
அடைத்து அந்த இயக்குனரை மீண்டும் உச்சத்தில் கொண்டு வந்து வைத்து தனது ராஜ்ஜியத்தை தமிழ் சினிமாவிற்கு உணர்த்த ரஜினி அதிக கவனம் செய்துள்ளார் என்பது தெரிகிறது.

உன் அப்பன் விசில கேட்டவன்  என்ற வரி பழைய சூப்பர் ஸ்டாரை யாரோ தட்டி எழுப்பி விட்டு விட்டார்கள் 
என்பது போல் தெரிகிறது. அடுத்த மாதம் ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. 
இப்போதே பல தயாரிப்பாளர்கள் அந்த மாதத்தில்  தங்களது படங்களை வெளியீடு செய்வதில் 
இருந்து பின் வாங்கி விட்டனர் என தமிழ் சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். 
ஒரே பாடலில் தமிழ் சினிமா உலகமே மிரண்டு போய் நிற்கிறது. 

-வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News