loader
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி!

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி!

கோலாலம்பூர் மே- 16

எம்.ஜி.ஆர் ,சிவாஜி ரஜினி ,கமல், தனுஷ், சிம்பு, மைக்கல் ஜாக்சன், விஜய்காந்த், நாகேஸ், மன்சூர் அலிகான், கார்த்திக், பி.ரம்லி  என 12 வேடங்களில் மலேசிய கலைஞர்கள் மேடையில் 30க்கு மேற்பட்ட நடனங்களை படைக்கவுள்ளனர். 

இந்த அனைத்து நாயகர்களின் நாயகியாக 20 ஆண்டுகாலமாக கலைத்துறை இருக்கும் honey பிரியா நடனமாடவுள்ளார்.

தலைநகர்  சோமா அரங்கத்தில் எதிர்வரும் மே 21 திகதி  நடைப்பெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த கலைஞர்கள்  மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற ஒரே மேடையில் முதல் முறையாக 12 நடிகர்கள் போல் வேடமிட்டு கலைஞர்களின் படைப்பும் அவர்களோடு ஒரே ஒரு நாயகியாக honey பிரியா வளம்வந்து இடைவிடாத 30 பாடல்களுக்கு நடனம் அடும் முயற்சியில் கலம் இறங்கி உள்ளனர்.

மாலை 3 மணி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்தவர் ரோஜா கெதெரிங் உரிமையாளர் ரோஜா மலர். 

சாதனை புரிய துடிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முன்வந்ததாக ரோஜா மலர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் விலை 50 வெள்ளி என தெரிவித்த ரோஜா மலர் சுவையான உணவு மற்றும் அதிர்ஷ்ட குழுக்களும் உள்ளதாக தெரிவித்தார்.

முதல் பரிசு தங்க சங்கலி,  இரண்டாவது பரிசு Samsung தொலைப்பேசி, மூன்றாம் பரிசு தங்க வளையத் தோடு  மற்றும் இன்னும் சிறப்பு பரிசுகள் உள்ளது என ரோஜா மலர் தெரிவித்தார்.

இந்த கலைஞர்களின் சாதனைக்கு உதவும் நோக்கில் பொது மக்கள் டிக்கெட் வாங்கி ஆதரவு கொடுக்கும் படி ரோஜா மலர் கெட்டுக்கொண்டார்.

மேல் விவரங்களுக்கு 011-36778577

0 Comments

leave a reply

Recent News