loader
சமூக மேம்பாட்டு அறவாரியத்தின்  ரிதம் ஆப் யூனிட்டி !

சமூக மேம்பாட்டு அறவாரியத்தின் ரிதம் ஆப் யூனிட்டி !

கோலாலம்பூர்: மே.10-

சமூக மேம்பாட்டு அறவாரியத்தின் திட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ரிதம் ஆப் யூனிட்டி எனும்  விருந்துடன் கூடிய இன்னிசை கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ கனகம் கூறினார்.

முன்னாள் அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ பழனிவேல் இந்த அறவாரியத்தை கடந்த 1994ஆம் ஆண்டு தொடங்கினார்.

கல்வி, பொருளாதாரம், தொழில் திறன் உட்பட இந்திய சமுதாயத்தில் மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகள் இந்த அறவாரியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.தற்போது அறவாரியத்தின் தலைவராக பொறுபேற்ற நான் அதனை வலுப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

அவ்வகையில் அறவாரியத்தின் திட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த விருந்துடன் கூடிய இன்னிசை கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ கனகம் கூறினார்.

இந்த நிகழ்வு வரும் ஜூன் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு செந்தூல் எச்ஜிஎச் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடகி தன்வி ஷா, பாடகர் சத்திய பிரகாஷ் தலைமையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதே வேளையில் டாக்டர் ரவிசந்திரிக்கா, புவனேஸ்வரன், தேவராஜன், சுகுனா ஆகியோரும் இன்னிசை  நிகழ்வில் தங்களின் படைப்புகளை வழங்கவுள்ளனர்.
நிகழ்வில் கிட்டத்தட்ட 1000 பேர் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

ஆகவே மக்கள் இந்த நிகழ்வுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அதன் ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் டத்தோ மலர்விழி குணசீலன் கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்வு குறித்த மேல்விரங்களுக்கு 0169800857 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

0 Comments

leave a reply

Recent News