loader
நம் வீட்டுப் பிள்ளை அழுகிறது...  கை கொடுக்குமா இந்திய சமுதாயம்!

நம் வீட்டுப் பிள்ளை அழுகிறது... கை கொடுக்குமா இந்திய சமுதாயம்!

(வெற்றி விக்டர்)

 
கோலாலம்பூர் மே- 5

நாட்டில் நடக்கும் பல தமிழ்நாட்டு கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் நம் மக்கள், நம் நாட்டு மண்ணின் மைந்தர்களின் கலை நிகழ்ச்சியை கைவிடலாமா? என்ற கேள்வியை தமிழ் லென்ஸ் முன்வைக்கின்றோம்.

Samba Rock என்ற கலை நிகழ்ச்சி எதிர்வரும்  மே14 ஆம் திகதி செந்தூல்  HGH பிரமாண்ட மண்டபத்தில்  மாலை 7 மணியளவில் நடைப்பெறவுள்ளது.

டாக்கி, சந்தேஸ்,  ஹெர்வீன் கபீல் ராஜ் என சுமார் 11-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் முதல் முறையாக படைக்கவிருக்கும் மாபெரும் உள்ளுர்  கலைநிகழ்ச்சிக்கு ஆதரவு குறைவாக இருக்கிறது என ஏற்பாட்டாளர் சிவகுமார் ராஜேஸ் வருத்தத்துடன் தெரிவித்தார்.

நம் நாட்டு கலைஞர்கள் ஆதரவு கேட்டு கையேந்துவது நியாயமா? அந்நிய நாட்டு கலைஞர்களை கொண்டாடுபவர்கள் இவர்களை தூக்கிவிட்டால் இந்த கலைநிகழ்ச்சியின் வெற்றியின் பிறகு இன்னும் பல கலைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளுர் கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சி செய்ய முன் வருவார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம்  டிக்கெட் விற்பனை தொடங்கி 1,700 பேர் இருக்கை கொண்ட  அந்த மண்டபத்தில்  வெறும் 300 டிக்கெட் மட்டும்தான் இதுவரை விற்கப்பட்டது. அந்த வகையில்  300 பேர்களுக்கு நன்றி. அடுத்த வாரம் கலைநிகழ்ச்சி ஆனால் இன்னும் 1500 டிக்கெட் விற்கவில்லை ஆனால் வெளிநாட்டு நட்சத்திரங்களின் டிக்கெட் சில மணி நேரத்தில் விற்று முடிந்ததாக செய்திகள் வெளிவருகிறது.
என்ன செய்யபோகிறது சமுதாயம். ஆதரவு கேட்டு கையேந்தும் நிலையில் மலேசிய கலைஞர்கள்.

இந்த ஏற்பாட்டு குழுவினரின் அதிகபட்ச VVIP டிக்கெட் விலையே 189 வெள்ளி ஆகும். குறைவான டிக்கெட் விலை 59 வெள்ளி. ஆனால் வெளிநாட்டு படைப்பின் ஆக குறைவான டிக்கெட் விலையே 199 வெள்ளியில் தொடங்கும்  ஆனால் இங்கு ஏன் ஆதரவு இல்லை என்ற கேள்வியை மக்களிடத்தில் விட்டு விடுகிறோம்.

இன்னமும் நம் சமுதாயம் உள்ளூர் கலைஞருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஏற்பாட்டு குழுவினர் ஊடகத்தை நாடி வந்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ் லென்ஸ் மக்களிடத்தில் வைக்கும் கோரிக்கை நம் விட்டு பிள்ளை அழுகிறது கைகொடுக்க வாருங்கள்.

மாணவர்களே உங்களுக்கு ஏற்பாட்டு குழுவினர் டிக்கெட் விலையில் 20 விழுக்காடு கழிவு தருவதாக தெரிவித்து உள்ளனர். ஒரு கல்லூரியில் இருந்து 10 மாணவர்கள் கலந்துக்கொண்டால் 50 கல்லூரியில் 500 மாணவர்கள் கைகொடுங்கள்.

மகளிர்களே  தாயை போற்றும் நல்ல தினத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபடுவதால் திருமணம் ஆகிய மகளிர்களுக்கும் 20 விழுக்காடு கழிவு உண்டு.

அதோடு வருகை அழிக்கும் தயார்களுக்கு ஏற்பாடு குழுவினர்  கொண்டாடத்துடன் கூடிய பரிசும் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதுமற்றும்மின்றி அதிர்ஸ்ட குலுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியை வெற்றி அடை செய்யுமா நம் சமுதாயம்? விடையை சமுதாயத்திடமே விட்டு விடுகிறோம்...


உங்கள் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் வாங்க விரும்புவோர்: www.myticket.asia  வாயிலாக வாங்கலாம்.
அல்லது கீழ் காணும் எண்ணில்  தொடர்பு கொள்ளவும்
016- 918 4325 , 016- 892 2705, 016 -9164345

0 Comments

leave a reply

Recent News