loader
இயக்குனர் மனோபாலா காலமானார்!

இயக்குனர் மனோபாலா காலமானார்!

சென்னை மே-3

காமேடி நடிகரும் பிரபல இயக்குனரான மனோபாலா (69வயது) இன்று காலமானார். கல்லீரல் நோய் தொடர்பாக சென்னையில் தனது வீட்டில் சிகிச்சை எடுத்தவந்த நிலையில் இன்று தனது இல்லத்தில் அவர் காலமானதாக தகவல் கிடைத்துள்ளது.
 சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களை வைத்து ஊர் காவலன் என்ற வெற்றி படத்தை வழங்கியவர் இயக்குனர் மனோபாலா .இது போன்று 20க்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய இவர் தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகராகவும் வளம் வந்தார்.

இவரின் மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

0 Comments

leave a reply

Recent News