loader
சம்பா ராக் கலைநிகழ்ச்சிக்கு  மக்களின் ஆதரவு தேவை!

சம்பா ராக் கலைநிகழ்ச்சிக்கு மக்களின் ஆதரவு தேவை!

கோலாலம்பூர், மே.02-

நாட்டில் தற்பொழுது எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதற்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு கிடைப்பது போல் உள்ளூர் கலைஞர்களின் படைப்பில் நடைபெறவிருக்கும் டாக்கியின் சம்பா ராக் கலைநிகழ்ச்சிக்கு அதே ஆதரவு கிடைக்கப்பட வேண்டும் என அதன் ஏற்பாட்டாளரான WHIMSY STREAMS நிறுவன உரிமையாளர் ஹெடி கேட்டுக்கொண்டார்.

 இம்மாதம் 14ஆம் தேதி இரவு  செந்தூல் எச்.ஜி.எச் அரங்கத்தில் நடைபெறவிருக்கும்
உள்ளூர் ராக் பாடல்களின் ஜாம்பவான் டாக்கியின் SAMBA ROCK LIKE NEVER BEFORE எனும் மாபெரும் கலைநிகழ்ச்சியில் மற்ற உள்ளூர் களைஞர்களான ஹெர்வின், சந்தேஷ், கபில் ராஜ், என்.எம்.லிங்கேஷ், எம்.சி.ராஜ், பிராடெர்கன், டிரீம் கேச்சர் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய டாக்கி, இது போன்ற கலை நிகழ்ச்சிகளை உள்ளூர் கலைஞர்களுக்கு செய்தால் மட்டுமே அவர்கள் வாழ முடியும்.மக்கள் கொடுக்கும் ஆதரவில் தான் கலைஞர்கள் தங்களின் துறையில்  அடுத்த நிலையை அடைய முடியும். எனவே மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்வதற்கு மக்களின் ஆதரவு இந்நிகழ்ச்சிக்கு தேவை என கூறினார்.

அவ்வகையில் சம்பா ராக் நிகழ்ச்சி நிச்சயம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கும் மக்களை மகிழ்விக்கும் வகையில் பல சிறப்பு அங்கங்களை ஏற்பாட்டுக் குழு செய்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை அறிந்து ஏற்பாட்டுக்குழு இந்நிகழ்ச்சிக்கான டிக்கேட் கட்டணத்தை நியாயமான விலையில் மக்களுக்கு விற்பனை செய்கிறது. குறைந்தபட்சம் 59 வெள்ளியிலிருந்து அதிகபட்சம் 189 வெள்ளிக்கு மட்டுமே டிக்கேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என நிகழ்ச்சியின் நிர்வாக குழு தலைவர் வான்ஜராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கேட்டுகளை மக்கள் my ticket.Asia என்ற அகப்பக்கத்தில் அல்லது நேரடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவான  WHIMSY STREAMS 016-9164345 என்ற எஎண்ணில் தொடர்புக் கொண்டு வாங்கிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

-இ.எஸ்.காளிதாசன்

 

 

0 Comments

leave a reply

Recent News