loader
2 நிமிட அறிவிப்புக்கு  2 நாட்களாக விளக்கம் அளிக்கிறார் சிவகுமார்!

2 நிமிட அறிவிப்புக்கு 2 நாட்களாக விளக்கம் அளிக்கிறார் சிவகுமார்!

கோலாலம்பூர் பிப்ரவரி-27

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட நிதி தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவிக்காத நிலையில் அதற்கு இரண்டு நாட்களாக விளக்கம் அளித்து வருகிறார் மனிதவள அமைச்சர் சிவகுமார்.

நேற்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூட நான் எதையும் பார்க்காமல்  பேசமாட்டேன் ஒதுக்கீடு பட்ஜெட் புத்தகத்தில் இருக்கிறது என தெரிவித்த அவர்.

 பட்ஜெட் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் சொல்வதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கும் அது அவ்வளவு பெரிய புத்தகம் அதனால் பிரதமர் முக்கியமான விஷயங்களை நேரத்திற்குள் அறிவித்திருக்கிறார் என்றார்.

 ஆனால் பிரதமரின் பட்ஜெட் தாக்களுக்கு முன் இந்தியர்களுக்கு என்னென்ன நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நிதி அமைச்சு எனக்கு தெரிவித்துவிட்டது அது புத்தகத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை நான் அலசி ஆராய்ந்து பார்த்தேன் புத்தகத்தில் இருக்கிறது என அவர் மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தினார்.

அதன் அடிப்படையில் நான் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை  அறிவித்தேன் என சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் முதல்முறையாக அறிவிக்கும் பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு என்னென்ன திட்டங்களை வகுத்து வைத்துள்ளார் என்பதை எதிர்பார்த்து இந்திய சமுதாயம் காத்திருந்தது.

அந்த பட்ஜெட் நேரத்தில் சமுதாயத்திற்காக வகுக்கப்பட்ட மூன்று திட்டங்கள் அதை சொல்வதற்கு இரண்டு நிமிடம் தான் தேவைப்படும் ஆனால் அதை மனிதவள   அமைச்சருக்கு நிதி அமைச்சு தெரிவித்து பின்னர் மனிதவள  அமைச்சர் அந்த அறிவிப்பை கொடுத்து, அது  குழப்பத்தை ஏற்படுத்தி இரண்டு நாட்களாக இவர் இப்படி விளக்கம் மேல் விளக்கம் அளிப்பதற்கு இரண்டே நிமிடத்தில் அறிவிப்பை செய்து நேரடியாக சமுதாயத்திடமே தெரிவித்திருக்கலாம். 
இப்படி சப்பகட்டு கட்ட தேவையில்லை  என பலர் தெரிவித்துவருகின்றனர்.

கடந்த காலங்களில்  மித்ராவுக்கு வழங்கப்பட்ட நிதிகள் எல்லாம் பட்ஜெட்டில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஒன்றுதான் , அப்படியே நடைமுறைப்படுத்திருக்கலாம் . அதை விடுத்து  நிதி அமைச்சு  மனிதவள அமைச்சரிடம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்காமல் பின்னர் மனிதவள அமைச்சர் அதை அறிவித்து அது குழப்பத்தை ஏற்படுத்தி இப்போது இரண்டு நாட்களாக சிவகுமார் விளக்கம் மேல் விளக்கம் அளித்து வருகிறார் பல செய்தி ஊடகஙகளுக்கு.

எந்த ஒரு பட்ஜெட்டிலும் நடக்காத குழப்பம், நடக்காத அறிவிப்பு ,இந்த பட்ஜெட்டில் அரங்கேறியதின் பிரதிபலிப்பாக இது காணப்படுகிறது.

0 Comments

leave a reply

Recent News