loader
முதுகுத் தண்டு உடைந்து அஜித் ரசிகர் மரணம்!  ‘துணிவு’ படம் பார்க்க வந்த போது நிகழ்ந்த சோகம்!

முதுகுத் தண்டு உடைந்து அஜித் ரசிகர் மரணம்! ‘துணிவு’ படம் பார்க்க வந்த போது நிகழ்ந்த சோகம்!

 

`துணிவு' படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் லாரி மீது ஏறி நடனமாடி கீழே குதித்ததில் முதுகுத்தண்டு உடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் நடித்துள்ள `துணிவு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் ரோகினி திரையரங்கில் வெளியான `துணிவு' பட சிறப்பு காட்சியை காண ஏராளமான அஜித் ரசிகர்கள் வருகை தந்து, பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி கீழே குதித்ததில் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த ரசிகர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

`துணிவு' படம் பார்க்க வந்த இடத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது!

0 Comments

leave a reply

Recent News