loader
இந்த நாட்டுக் கலைஞர்கள் சொகுசாக வாழவில்லை!  இ.பி.எஃப் சொக்சோ இல்லாமல் அவதிப்படுகிறார்கள்!

இந்த நாட்டுக் கலைஞர்கள் சொகுசாக வாழவில்லை! இ.பி.எஃப் சொக்சோ இல்லாமல் அவதிப்படுகிறார்கள்!

(வெற்றி விக்டர்)

பெட்டாலிங் ஜெயா- 10

மிம்டா எனப்படும் மலேசிய இந்திய திரைப்பட இயக்குனர் சங்கத்தின் ஏற்பாட்டில், 'மலேசிய நட்சத்திரங்களுடன் ஒரு மாலை பொழுது'  கலைநிகழ்ச்சி, பெட்டாலிங் ஜெயா கிரிஸ்டல் கிராவ்ன் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தகவல் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ  தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர் ஓம்ஸ் தியாகராஜன், மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் ஆகியோருடன் இன்னும் சில தயாரிப்பு நிறுவன இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

அவ்வியக்கத்தின் தலைவரான  காந்திபென் @ பென் ஜி அமைச்சர் முன்னிலையில் கலைஞர்களுக்காக  மூன்று கோரிக்கைகளை முன் வைத்தார்.

கலைஞர்களுக்கு இலவச மருத்துவ அட்டை வழங்க வேண்டும் என்பதே எங்கள் முதல் கோரிக்கை.

இங்கு பலர் நினைப்பது போல், மலேசிய இந்திய கலைஞர்கள் சொகுசாக வாழவில்லை. இ.பி.எஃப் சொக்சோ கூட இல்லாமல்தான் வாழ்கிறோம். ஆகையால் மூத்தக் கலைஞர்களுக்கு  வீடுகள் வழங்கப்பட வேண்டும். அது இலவசமாகவோ அல்லது மளிவு விலையிலோ இருந்தால் நல்லது. காரணம் கலைத்துறையை மட்டுமே நம்பியுள்ள கலைஞர்களுக்கு, மாதம் வருமானம் என்ற ஒன்று இல்லை.  இ.பி.எஃப் ,சொக்சோ கிடையாது என்பதால், கடன் உதவி கிடைப்பதிலும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதனை அமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும் என பென்ஜி தெரிவித்தார்.

மூன்றாவது கோரிக்கையாக,  எங்கோ உள்ள இந்திய நாட்டுக் கலைஞர்களுக்கு கிடைக்கும் டத்தோ விருது அங்கீகாரம், உள்நாட்டுக் கலைஞர்களுக்கு அதுவும் கலைத்துறையில் நீண்டகாலம் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும்  எனவும் அமைச்சர் கோபிந் சிங் முன்னிலையில் கோரிக்கை வைத்தார் காந்தி பென்.

அமைச்சர் கோபிந்த் சிங் தமது சிறப்புரையில், எங்கள் அமைச்சின் கீழ் உள்ள இத்துறையை நிச்சயம் கவனத்தில் கொள்வோம். அடுத்த தலைமுறை எளிதாக வாழ இத்துறையை அடுத்த நிலைக்கு நகர்த்தும் எல்லா முயற்சிகளும்  ஃபினாஸ் வழி இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும். குறிப்பாக இலவச மருத்துவ அட்டை மற்றும் கலைஞர்களுக்கு இ.பி.எஃப், சொக்சோ தொடர்பான நல்ல செய்தியும் உண்டு.

அதே சமயம் கலைஞர்கள் வீடு வாங்க சிரமப்படும் பிரச்னை, கவனிக்கப்படவேண்டிய பிரச்னை. அதற்கும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்தார். நல்ல தகவல்களை என்னோடு பகிருங்கள். கலைஞர்களுக்கு வேண்டியதை, நல்ல விஷயங்களைக் கண்டிப்பாக நான் சீர் தூக்கிப் பார்ப்பேன். கலைத்துறைக்குச் சேவை செய்யும் நம் நாட்டுக் கலைஞர்கள்  கண்டிப்பாக கௌரவிக்கப்படவேண்டும் என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News