loader
இளம் வர்த்தகர்களை உருவாக்குவேத  எங்கள் இலக்கு!  - நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம்!

இளம் வர்த்தகர்களை உருவாக்குவேத எங்கள் இலக்கு! - நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம்!

நெகிரி செம்பிலான் ஜூன் -3

நெகிரி செம்பிலானில், பல இந்திய வர்த்தகர்களை உருவாக்கி வருவதோடு, அவர்கள் வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது, நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம்.

அதிகமான இளம் வர்த்தகர்களைக் கொண்டு துடிப்புடன் செயல்பட்டு வரும், இச்சங்கத்தின் 33-வது ஆண்டுக் கூட்டம், நெகிரி செம்பிலான் சிட்டி கிங்டம் கொன்வென்ஷன் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகர்  ரவி, மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் டத்தோ ராஜசேகரன், பொதுச் செயலாளர் டத்தோ ஏ.டி குமாரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஆண்டான இவ்வாண்டு,  நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்திற்கு மீண்டும்   ஆர்.ராஜேந்திரன் போட்டியின்றித் தேர்வு பெற்றார். இவ்வியக்கத்தின் புதிய துணைத்தலைவராக  எம்.திருநாவுக்கரசு தேர்வு பெற்ற நிலையில், உதவித் தலைவர்களாக கருடா சிவா , பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக தெய்வீய முகுந்தன், துணைப் பொதுச்செயலாளராக ராஜசேகரன், பொருளாளராக மணிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜேந்திரன், நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம் எப்போதும் இளம்  இந்திய தொழில்முனைவர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகமான இந்திய இளைஞர்கள், மகளிருக்குப் பலவிதமான பயிற்சிகளை வழங்கி, அவர்களைத் தொழில் தொடங்கவும் உதவி செய்து வருகிறது.

அந்த வகையில் இந்த நடவடிக்கைகள் தொடச்சியாக முன்னெடுக்கப்படும். அதற்கு எங்களுக்கு உறுதுணையாக மாநில அரசும், மைக்கியும் இருக்கவேண்டும்  எனக் கேட்டுக்கொண்டார்!

 

0 Comments

leave a reply

Recent News