loader
மிகா விருது 2019  ஆஸ்ட்ரோ வானவில்லின் 5  நாடகங்கள் தேர்வு!

மிகா விருது 2019 ஆஸ்ட்ரோ வானவில்லின் 5 நாடகங்கள் தேர்வு!

மலேசிய உள்ளூர் படைப்புகளுக்குச் சிறந்த அங்கீகாரம் வழங்கும் நோக்கில், ‘மலேசிய இந்திய சினிமா விருது’ (மிகா) நிகழ்வு இவ்வாண்டும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 

அவ்வகையில், கடந்த ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில் தயாரிப்பில் வெளிவந்த ‘பினல் கோட் 302’, ‘காதல் நெஞ்சோடு’, ‘ரயில் பயணங்கள்’, ‘சாலை ஓரம்’, ‘வெவ்வேறு ரூபம்’ ஆகிய 5 தொலைக்காட்சி நாடகங்கள் ‘Astro Ulagam Most Popular’ எனும் பிரிவில், மிகா விருது விழாவில் போட்டியிடவுள்ளது.
இந்த 5 நாடகங்களில் ரசிகர்களின் விருப்ப  நாடகம் இப்பிரிவில் வெற்றி பெற வேண்டுமென்றால், www.astroulagam.com.my/mica-voting எனும் அகப்பக்கத்தை நாடி, மே 15-ஆம் தேதிக்குள் வாக்களிக்க வேண்டும்.
தற்போது ‘வெவ்வேறு ரூபம்’ நாடகம் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேல் விவரங்களை www.astroulagam.com.my அகப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்!

0 Comments

leave a reply

Recent News