loader
சாமி ஆடிக்கொண்டு சிறுமிக்கு மதுபானம கொடுப்பதா? மக்கள் கண்டனம்!

சாமி ஆடிக்கொண்டு சிறுமிக்கு மதுபானம கொடுப்பதா? மக்கள் கண்டனம்!

கோலாலம்பூர், ஆக.16-
சாமி ஆடிக்கொண்டு தன் மடியில்  அமர்ந்திருக்கும் சிறுமிக்கு  மதுபானம் கொடுக்கும் காணொளி காட்சி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்தக் காணொளியில் காணப்படும் காட்சியில் இங்குள்ள ஒரு கோவில் திருவிழாவில் நிகழ்ந்த சம்பவம் என்பது தெரிகிறது.

வைரலாகி வரும் அந்த காணொளியில் சம்பந்தப்பட்ட நபர்  கத்தியின் மேல் அமர்ந்து சாமி ஆடிக்கொண்டு தன் மடியில் அமர்ந்திருக்கும் சிறுமிக்கு  பீர் மதுபானம் கொடுக்கும் காட்சி பொதுமக்களிடையே பெரும்  சினத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக முகநூலில் வெளியிடப்பட்ட இந்த காணொளிக்கு சமூகவலைத்தளவாசிகள் பலர் தங்களின் கண்டனத்தை வெளியிட்டது வருகின்றனர்.

தற்பொழுது அந்த காணொளி டிக் டாக், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருவதைத் தொடர்ந்து, மேலும் பல எதிர்ப்பு கருத்துக்கள் வெளியாகி வருகிறது. சாமி ஆடுவதாக கூறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நம் இனத்தையும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் செயலாகும். இது  போன்ற செயல்களுக்கு சமுதாயம் ஒருபோதும் வழி விடக்கூடாது.

சாமி ஆடுவது என்றால் அதற்கும் ஒரு கட்டுப்பாடு உண்டு. பிள்ளைகளுக்கு மதுபானம் கொடுப்பது சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இது போன்ற காரியங்களை நாம் தடுக்க வேண்டும்.

சிறுமிக்கு  மதுபானத்தை கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எங்கு செல்கிறது நம் சமுதாயம். இவர்களின் இந்த முறையற்ற செயலுக்கு நிச்சயம் பதில் கூற வேண்டும். தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலைத்தளவாசிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

0 Comments

leave a reply

Recent News