கோலாலம்பூர், ஜூன் 26-
பிரபல தொழிலதிபர் டத்தோ மாலிக் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 (ஆம்லா) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்காக எம்.ஏ.சி.சி.யால் தடுத்து வைக்கப்பட்டார்.
நேற்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் அவரை தடுத்து விசாரிக்க ஒரு நாள் மட்டும் லஞ்ச ஒழிப்பு இலாக்காவிற்கு ஷா ஆலம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அது இன்றோடு முடிவடைந்து, இன்று மீண்டும் அவரை விசாரணைக்காக தடுத்து வைக்க
புத்ரா ஜெயா நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர் படுத்தினர் .
அப்போது நீதிபதி , டத்தோ மாலிக்கை தடுத்து வைக்க எந்த ஒரு முகாந்திரம் இல்லை என கூறி உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
0 Comments