loader
ஜ.செ.க இந்தியத் தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா? தலைமைக்கு பயந்து  மெளனமாக உள்ளார்களா? சொந்த கட்சியில் உள்ள இந்தியருக்குக் குரல் கொடுக்காதவர்கள் சமுதாயத்திற்குக் குரல் கொடுப்பார்களா?

ஜ.செ.க இந்தியத் தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா? தலைமைக்கு பயந்து மெளனமாக உள்ளார்களா? சொந்த கட்சியில் உள்ள இந்தியருக்குக் குரல் கொடுக்காதவர்கள் சமுதாயத்திற்குக் குரல் கொடுப்பார்களா?

கோலாலம்பூர் ஜூலை -25

ஜ.செ.க கட்சியின் தலைமையின் சில நடவடிக்கைகள்  ,அந்தக் கட்சியில் இந்தியத் தலைவர்களை ஆமா சாமி கும்பல் போல் 
வைத்து கொள்ள முற்படுவது போல் உள்ளது என ஜ.செ.க கட்சியின் அடிமட்ட இந்திய உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பினாங்கு துணை  முதலமைச்சர்  பேராசிரியர் ராமசாமிக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அவருக்கு 70 வயதாகி விட்டது என 
காமாட்சி தற்போது அவருக்காக குரல்  எழுப்பியதோடு,  ஏன் ஜ.செ.க இந்திய தலைவர்கள் இப்படி மெளனமாக இருக்கிறீர்கள்
என அவர் கேள்வி எழுப்பி, இப்படி ஓர் அடக்குமுறை ஜ.செ.க - வில் நடக்கிறது என்பதை குரல் பதிவின் வாயிலாக 
அம்பலப்படுத்தினார் . இதனால் வரும் விளைவுகளை நான் சந்திக்க தயார் என்றார்  காமாட்சி. ஆனால் நம் சமுதாயம் இந்த கட்சியில் பின்னடைவை காண்கிறது என்றார்.

ராமிசாமிக்கு மட்டுமா வயதாகி விட்டது? இதற்கு முன் வயதான யாரும் இந்தக் கட்சியில் போட்டியிடவில்லையா? 
நடக்கமுடியாமல் இருந்தவர்கள் எல்லாம் போட்டி போட்டார்களே அப்போது வயது கண்ணுக்கு தெரியவில்லையா என காமாட்சி  கேள்வி எழுப்பினார்.

சரி ராமசாமிக்கு  வயதாகி விட்டது;  சதிஸ் முனியாண்டி என்ன கிழவரா? என காமாட்சி தைரியமாக குரல் பதிவில் 
கேள்வி எழுப்பினார். இந்தக் கட்சிக்கு 85 விழுக்காட்டு இந்தியர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் ஆனால் இந்தியர்களுக்கு
வாய்ப்பும் இல்லை மதிப்பும் இல்லை; இதை தட்டி கேட்க இந்திய தலைவர்கள் முன் வருவதும் இல்லை.
ஏதோ ஒரு சுய நலத்திற்காக தலைவர்கள் மெளனமாக இருக்கிறார்கள் என காமாட்சி தெரிவித்தார். 
இதனால் இந்தக் கட்சியில் உள்ள இந்தியர்களுக்கு தான் பின்னடைவு. 

இதை யார் பேசுவார் ?  என் குரல் பதிவு நிச்சயம் பல இடத்தில்  பகிரப்படும்; இதன் பின் விளைவைச் சந்திக்க நான் தயார் என
தமிழச்சி காமாட்சி தைரியமான  ஒரு குரல் பதிவை வெளியிட்டுள்ளார்.

-வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News