loader
கலை நிகழ்ச்சி டத்தோவிடம் எம்.ஏ.சி.சி விசாரணை!

கலை நிகழ்ச்சி டத்தோவிடம் எம்.ஏ.சி.சி விசாரணை!

கோலாலம்பூர், ஜூலை 25-

தமிழக இசைக்கலைஞர்களை கொண்டு நாட்டில் பல கலை நிகழ்ச்சியிகளை நடத்தி வந்த டத்தோ ஒருவரை  விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 (ஆம்லா) ஆகியவற்றின் கீழ் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார் .

அவரிடம் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர். அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 

டத்தோ -வின்  கீழ் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. தமிழக திரைப்படங்களை இங்கு வெளியிடும் நிறுவனத்தை அவர் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News