கோலாலம்பூர், ஜூலை 24-
அடுத்த மாதம் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மஇகா உறுப்பினர்கள் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வாக்களிக்கும்படி மஇகாவின் முன்னாள் உறுப்பினரான பி.புனிதன் அனைவரையும் அழைக்கிறார்.
மாநில தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பில் தேசிய முன்னணி மஇகாவையும் மசீசவையும் அழைக்கவில்லை என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியதை தொடர்ந்து புனிதன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணியை நம்பி இனியும் இந்திய சமுதாயம் ஏமாறக்கூடாது என பெரிக்காத்தான் நேஷனலின் இந்திய சமூகத்திற்கான சிறப்பு செயலகத்தின் துணைத் தலைவரான அவர் சொன்னார்..
தொகுதி பங்கீட்டில் தேசிய முன்னணி மஇகாவை ஒதுக்கியது இதுநாள் வரை அந்த கட்சியின் சேவைகளை அது புறக்கணிப்பது தெளிவாக புரிகிறது. ஆகையால் மஇகா உறுப்பினர்கள் அனைவரும் இம்முறை நடைபெறவுள்ள மாநில தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு முழு ஆதரவை வழங்கும் படி புனிதன் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.
மஇகா உறுப்பினர்கள் தைரியமாக அவர்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்றார். மேலும் இந்திய சமுதாயத்தின் நலன் மீது பெரிக்காத்தான் நேஷனல் அக்கரையுடன் உள்ளது. இனியும் பக்காத்தான் ஹராப்பான் - தேசிய முன்னணிக்கு வாக்களித்து மக்கள் மீண்டும் தவரை புரிய வேண்டாம் என்றும் பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிக்கும்படி அவர் இந்திய சமுதாயத்தை கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில மஇகாவின் இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான பி.புனிதன் கடந்த ஜூன் மாதம் மஇகாவிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஇகாவை விட்டு விலகிய அவருக்கு பெரிக்காத்தான் நேஷனலின் இந்திய சமூகத்திற்கான சிறப்பு செயலகத்தின் துணைத் தலைவர் பதவியை அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடின் அவருக்கு வழங்கினார்.
மாநில தேர்தலுக்கு பிறகு இந்த செயற்குழு பெரிக்காத்தான் நேஷனிலில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஓர் கட்சியாக மாறாவுள்ளதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
0 Comments