loader
இடைநிலைப் பள்ளியில்  தமிழ்வகுப்பு:  விதிமுறை தளர்வு!  கல்வி அமைச்சு மறுஆய்வு செய்யும்! - பட்லினா சிடேக்

இடைநிலைப் பள்ளியில் தமிழ்வகுப்பு: விதிமுறை தளர்வு! கல்வி அமைச்சு மறுஆய்வு செய்யும்! - பட்லினா சிடேக்

கோலாலம்பூர், ஜூலை 24-

11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சிறப்புரையாற்றிய ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் இடைநிலை பள்ளியில் தமிழ்கல்வி தொடர்பான விதிமுறையில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை 15 -க்கு மேல் இருந்தால் மட்டுமே தமிழ் வகுப்பு  இடைநிலை பள்ளியில் போதிக்க படும் விதிமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 14 அல்லது 13 மாணவர்கள் இருந்தாலும் அந்த வாய்ப்பு மறுக்க படுகிறது என அவர் கூறினார்.

இதற்கு பதில் கூறிய பிரதமர், விதிமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என அந்த மாநாட்டு மேடையில் கூறியிருந்தார்.

டத்தோஸ்ரீ சரவணன் கோரிக்கை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய விஷயம் என்றார். அதோடு இது தொடர்பாக கல்வி அமைச்சரை சந்தித்து விதிமுறையில் சில தளர்வுகளை கொண்டு வந்து 10 அல்லது 9 மாணவர்கள் இருந்தாலும் தமிழ்வகுப்பு நடத்த சில மாற்றங்களை செய்ய பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தார்.

இதனிடையே இடைநிலை பள்ளியில்  தமிழ் வகுப்பு விதிமுறை தளர்வு தொடர்பாக கல்வி அமைச்சு மறு ஆய்வு செய்யும் என கல்வி அமைச்சர் பட்லீனா சீடேக் தற்போது தெரிவித்துள்ளார்.

இதனை அமல்படுத்துவதற்கு முன் ஆய்வுகள் நடத்தி விதிமுறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம், எது சிறந்தது என்பதை கல்வி அமைச்சு ஆராயும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News