loader
உரையை நிப்பாட்டுங்க ! அவரது உத்தரவு! அமைச்சருக்கு துணையமைச்சர் கொடுத்த சிக்னல் ! - வைரல் ஆகும் வீடியோ

உரையை நிப்பாட்டுங்க ! அவரது உத்தரவு! அமைச்சருக்கு துணையமைச்சர் கொடுத்த சிக்னல் ! - வைரல் ஆகும் வீடியோ

கோலாலம்பூர், ஜூலை 24-

11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்  டத்தோஸ்ரீ சரவணன் உரை இருக்குமா என பல சர்ச்சை  நிலவினாலும், மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழாவின் முதல் உரையாக டத்தோஸ்ரீ சரவணன் உரை இருந்தது.

மலாய் மற்றும் தமிழில் பேசிய டத்தோஸ்ரீ சரவணன்,  கொடுத்த நேரத்தில் இரு மொழியிலும் பேசி அடிக்கடி கடிகாரத்தை பார்த்து  சொல்ல வந்த தகவலை தனது பேச்சு நடையில் பேராளர்களை கவர்ந்ததுடன் நேரத்தோடு முடித்தார். 

பலருக்கு பேச்சை அதற்குள் முடித்து விட்டாரே என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதே நேரத்தில் மனிதவள அமைச்சர் வ.சிவகுமார்  3 மொழிகளில் ஈடுகொடுத்து பேசுவதாக சொல்லி ஆங்கிலத்தில் நம் நாட்டில் நடக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்னையை  கையில் எடுத்தார்.
அதாவது  தனது சொந்த அமைச்சில் நடக்கும்  பிரச்சினையை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பேசினார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கும்  அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கும்  என்ன சம்பந்தம் என அவரது உரைக்கு பின் சமுக வலைத்தளத்தில் நெட்டிசன்கள்  வருத்து எடுத்தனர்.

அவரது உரையை நெட்டிசன்கள்  விமர்சனம்  செய்து வந்த நிலையில் இப்பொழுது இன்னொரு காணொளி  நெட்டிசன்களுக்கு  அல்வா போல் கிடைத்துள்ளது. அதை வைத்து மனிதவள அமைச்சரை வருத்து எடுக்கின்றது.

மூன்று மொழியில்  பேசிய மனிதவள அமைச்சர், பிரதமர் முன்னிலையில் எனக்கு சிறிது கூடுதல் நேரம் கொடுங்க.. தமிழில் பேசுகிறேன் என அவர்  பிரதமர் மற்றும்  பேராளர்களை கேட்டார். அப்போது அரங்கமே புன்னகைத்தது. அந்த புன்னகையின் அர்த்தம் பேராளர்களுக்குதான் தெரியும்.

ஆனால் தற்போது வெளியான கானொளியில்  அமைச்சர் சிவகுமார் மாநாட்டில் தமிழில் உரையாற்றிய போது துணை அமைச்சர் சரஸ்வதி  கந்தசாமி உரையை நிப்பாட்டுங்க என சிவகுமாருக்கு சிக்னல் கொடுக்கிறார். அதோடு  விரல் விட்டு பிரதமரை சரஸ்வதி காண்பித்து உரையை முடிக்குமாறு சொல்லி சிக்னல் கொடுக்கிறார்.

நீண்ட நேரமாக உரையாற்றிய அமைச்சர் சிவகுமார், அமைச்சரவையில் பேசவேண்டிய விஷயங்களை (Keluar Tajuk) ஆங்கிலத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பேசியதை கேட்டதால் தமிழில் பேசும்போது நிறுத்தப்பட்டதா? அல்லது நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டு நேரத்திற்குள் உரையை நிறுத்தாமல் கூடுதல் நேரத்தை கேட்டு வாங்கியும் அதனையும் மீறி நம் நாட்டு சுக்மா விளையாட்டில் சிலம்பம், கபடி என தொடர்ந்து பேசியதால் நிறுத்தப்பட்டதா? அல்லது பிரதமர் இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும்  அடுத்து பிரதமர் உரை இருப்பதால் நேரம் கடந்தால்  பிரதமர் உரை சுருக்கமாக அமைந்துவிடும் என்பதால் சிக்னல் கொடுத்து நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

ஆனால் துணை அமைச்சர் சரஸ்வதி  பிரதமரை கைகாட்டி அமைச்சர் சிவகுமார் உரையை நிப்பாட்ட சொன்னது மட்டும் காணொளில்  தெளிவாக பதிவானது. அது இப்பொழுது வைரலாகி வருகிறது.

மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய  பிரதமர் கூட அவர் கேட்டதில் வேண்டியதை எடுத்து தமது உரையில் பேசினார். உதாரணத்திற்கு டத்தோ ஸ்ரீ சரவணனின் கோரிக்கையாகும். அந்த கோரிக்கை மொழி மற்றும் கல்வி சார்ந்தது என்பதனால் அதற்கு முக்கியதுவம் அளித்து அதை பிரதமர் தொட்டு பேசினார். சபைக்கு தேவையில்லாத விஷயங்களுக்கு அவர்  மேடையில் பதில் கொடுக்கவில்லை.

இந்த நாட்டில் மலாய் மொழி தேசிய மொழியாக இருந்தாலும் தாய் மொழிகள் காக்கப்பட வேண்டும். தேசிய ரீதியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்  என மாநாட்டுக்கு சம்பந்தப்பட்டதை மட்டும்தான் பிரதமரும் பேசினார்.  மாநாட்டுக்கு வெ.1 மில்லியன் நிதியும் , மொழி ஆய்வியலுக்கு  வெ.2 மில்லியன் நிதியும் அறிவித்தார்.  இப்படி  பிரதமர் உரையும் தமிழ் ஆராய்ச்சியை ஒட்டிதான் இருந்தது. ஆனால் மனிதவள அமைச்சர்  அவர் அமைச்சில் நடக்கும் பிரச்சினையை மாநாட்டில் பேசுகிறார் என விமர்சனங்களுக்கு மேல் விமர்சனம் சமுக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது.

-வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News