loader
அன்வார் கையில் ஆதியின் இதயம்!

அன்வார் கையில் ஆதியின் இதயம்!

கோலாலம்பூர் ஜூலை- 22

40 வருடமாக தமிழ்ப் பத்திரிக்கை துறையில் வலம்வந்து கொண்டிருக்கும் மூத்த பத்திரிக்கையாளர் பி.மலையாண்டி அவர்களின் கைவண்ணத்தில் இளைய தமிழவேள் ஆதி குமணன்  அவர்களின் வரலாற்றைப்  பல கோணங்களில் பதிவு செய்துள்ளார் .

இன்று நடைப்பெற்ற 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி  மாநாட்டில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முதல் புத்தகத்தை எழுத்தாளர் பி.மலையாண்டியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இளைய தமிழவேள் ஆதி குமணனின் அரசியல் எழுத்து , அவர் எழுத்தின் வாயிலாக இந்த சமுதாயத்திற்காக செய்த புரட்சி அனைத்தும் காலத்தால் அழியாதது.

அதன் பின் லோட்டஸ் நிறுவன உரிமையாளர் டான் ஸ்ரீ ரேனா  துரைசிங்கம் அவர்கள் அந்தப் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.

பத்திரிக்கை உலகில் மிக பெரிய ஜாம்பவான் என்றால் அது இளைய தமிழவேள் ஆதி குமணன். அவர் ஓர் அழியா சகாப்தம். அந்த மாபெரும் எழுத்தாளரை தமிழ்ப் மூத்த பத்திரிக்கையாளர் எழுத்தில் கௌரவித்தது  மிகச் சிறப்பு என மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் கு.தேவேந்திரன் பி.மலையாண்டிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

-வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News