கோலாலம்பூர் ஜூன் -7
2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அதோடு தமிழ்கல்வியை மேம்படுத்த ஏதாவது சிறப்பு நிதியை கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதா? என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.காவின் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம் .சரவணன் எழுப்பிய கேள்விக்கு கல்வி அமைச்சு சரியான பதிலை கொடுக்காமல் மழுப்பலான பதிலை கொடுத்துள்ளது.
கேட்ட கேள்வி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது , தமிழ் கல்விக்கு ஏதேனும் சிறப்பு நிதி உண்டா? என்பது தான் .இதற்கு எழுத்துப் பூர்வமாக கல்வி அமைச்சு பதில் கொடுத்துள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவு பெறும் பள்ளிகளின் மறு சீரமைப்புக்கு 900 மில்லியன் நிதி இவ்வாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்லா பள்ளிகளுக்கும் நியாயமாக கல்வி அமைச்சு நடந்துக்கொள்ளும். விண்ணபங்களை பொறுத்து நிதி வழங்கப்படும் -நன்றி என கல்வி அமைச்சு சம்பந்தம் இல்லாமல் மேலோட்டமான பதிலை கொடுத்துள்ளது.
பள்ளிகளின் மறுசீரமைப்புக்கு 900 மில்லியன் என்பது பட்ஜெட் அறிவிப்பின் போதே எல்லா மக்களுக்கும் தெரியும். அதில் தமிழ்ப்பள்ளிகளின் மறுசீரமைப்புக்கு இதுவரை எவ்வளவு நீதி ஒதுக்கப்பட்டது என்பது கூடவா கல்வி அமைச்சுக்கு தெரியாது? எத்தனை தமிழ்பள்ளிகள் இவ்வாண்டு மறுசீரமைக்க படுகிறது. அதன் எண்ணிக்கை செலவீனங்கள் என்ன என்பதை தெளிவாக கூறாமல், 900 மில்லியன் நிதி ஒதுக்கீடு. அதில் நாங்கள் அனைவருக்கும் நியாயமாக நடந்துகொள்வோம் என்றால் அந்த நியாயமான நிதி எவ்வளவு என்ற எண்ணிக்கையை சொல்லுங்கள். எத்தனை தமிழ் பள்ளிகளை அது உள்ளடக்கிய நிதி என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள். நியாயமா? இல்லையா? என்பதை மக்கள் சொல்வார்கள்.
அதோடு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சரவணன் தமிழ் கல்வி மேம்பாட்டிற்கு கல்வி அமைச்சு சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளதா? என்ற கேள்வியையும் முன்வைத்தார். அதற்கு கல்வி அமைச்சு பதிலை வழங்கவே இல்லை.
தமிழ் மொழி சார்ந்த புதிய பாடத்திட்டம் என்ன? இடைநிலை, பல்கலைகழக தமிழ் மொழி கல்வி மேம்பாடு தொடர்பாக என்ன நடவடிக்கையை கல்வி அமைச்சு எடுத்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சுக்கு உண்டு. ஆனால் அதை தொட்டு ஒரு பதிலையும் கல்வி அமைச்சு வழங்கவில்லை.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்வி வேறு. அதற்கு கல்வி அமைச்சு கொடுத்த பதில் வேறு. இது தான் கல்வி அமைச்சின் தரமா ?
செய்தி
(வெற்றி விக்டர்)
0 Comments